அறிவோம் தாவரங்களை – நூல்கோல் செடி

நூல்கோல் செடி. (Kohlrabi)

மத்திய தரைக்கடல் கிழக்குத்தீவு ‘சிப்ரஸ்’ உன் தாயகம்!

மலைப்பகுதி  &  சமவெளிகளில் பயிரிடப்படும் காய் செடி நீ!

ஜெர்மன், அமெரிக்கா வியட்நாம்  நாடுகளில்  உணவாகப்  பயன்படும் உன்னத காய் செடி நீ!

குடல்புண்,அஜீரணம், எலும்பு வலிமை, நுரையீரல் நலம், நரம்புத்தளர்ச்சி, சிவப்பணுக்கள் பெருக்கம்,  சர்க்கரை நோய், தாய்ப்பால் சுரப்பு, இதய நலம், கொழுப்புக் குறைப்பு, மார்பக புற்று நோய், குடல் புற்றுநோய், மாரடைப்பு ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

சாம்பார், குருமா, மோர்க் குழம்பு, கூட்டு,   பொரியல் எனப் பல்வகையில் பயன்படும் நல்வகை காய் செடி நீ!

அயர்லாந்து, ஸ்காட்லாந்து நாடுகளின் ஆலோவீன் பண்டிகைகளின் அகல் விளக்காய்ப் பயன்படும் காய் செடியே!

ஆண்டுக்கு இருமுறை  பயிரிடப்படும் அற்புத செடியே!

வைட்டமின் ஏ, சி, நிறைந்த சத்துக் காய்ச்செடியே!

நார்ச்சத்து நிறைந்த நல்ல செடியே!

60  நாட்களில் பலன் தரும் அழகு செடியே!

செம்மண் நிலத்தில் செம்மைச்செடியே!

கிழங்கு போல் தோற்றமளிக்கும் காய் செடியே!

நாசா விஞ்ஞானிகள் நிலவில்பயிரிட திட்டமிட்டுள்ள அதிஷ்டகாய்ச் செடியே!

கால்நடைகளின் தீவனமே!

இனிப்புச சுவை கொண்ட இனிய காய்செடியே!

மஞ்சள் நிறப் பூ பூக்கும் மகிமை செடியே!

உடல் துர்நாற்றத்தைப்போக்கும் உன்னத செடியே!

நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்,

நெய்வேலி.

☎️9443405050.