அறிவோம் தாவரங்களை – நீர்முள்ளி செடி
நீர்முள்ளி செடி.(Hygrophila auriculata)
நீர் ஆதாரம் உள்ள இடங்களில் வளரும் முள்செடி நீ!
வயல்கள், குளங்கள், குட்டைகள், வாய்க்கால், சிற்றோடை பகுதிகளில் வளரும் முள்செடிநீ!
முண்டகம், நிதகம், இக்குரம், காகண்டம், தூரகதமூலம் எனப் பல்வேறு பெயர்களில் விளங்கும் பசுமைச் செடி நீ!
60 செ.மீ. வரை உயரம் வளரும் அழகு செடி நீ!
சிறுநீர் எரிச்சல், சிறுநீர்க்கட்டு, கால் வீக்கம், ரத்த சோகை, ஆண்மைக் குறைபாடு, வயிற்றுப் புண், கண் எரிச்சல், வயிற்றுப் போக்கு, நீரிழிவு, மாதவிலக்கு, மேகநீர், சொறி, சிரங்கு, தலைவலி, காய்ச்சல், மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
பூக்கள், தண்டுகள், கனிகள், விதைகள், இலைகள், வேர் என எல்லாம் பயன்படும் நல்ல செடியே!
குடிநீர், கஷாயம், சூரணம், லேகியம் எனப் பல வகையில் பயன்படும் நல்வகைச் செடியே!
அணில் பற்கள் போன்று கூரான முள் கொண்ட நேரான செடியே! ஈட்டி வடிவ இலைகளை உடைய நாட்டுச் செடியே!
ஊதா நிறப் பூப்பூக்கும் உன்னதச் செடியே!
சதுர வடிவ தண்டு கொண்ட சரித்திரச் செடியே!
உடலை வலுவாக்கும் உன்னதச் செடியே!
தாம்பத்தியம் சிறக்க மருந்தாகப் பயன்படும் சிறந்த செடியே!
நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்
நெய்வேலி. 📱9443405050.