பாரிஸ்

ன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தொடங்கும் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி குறித்த விவரங்கள் இதோ.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று தொடங்கும் ஃபிஃபா பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 24 நாடுகள் கலண்டுக் கொள்ள உள்ளன.   இந்த போட்டி பிரான்ஸ் நாட்டில் 9 இடங்களில் நடைபெற உள்ளன. இந்த போட்டியை முதல் முறையாக பிரான்ஸ் அரசு நடத்துகிறது.

போட்டியில் கலந்துக் கொள்ளும் 24 அணிகளும் ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஏ குரூப் : பிரான்ஸ், தென் கொரியா, நார்வே, நைஜீரியா

பி குரூப் : ஜெர்மனி, சீனா, ஸ்பெயின், தென் ஆப்ரிக்கா

சி குரூப் : ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரேசில், ஜமைக்கா

டி குரூப் : இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அர்ஜெண்டினா, ஜப்பான்

இ குரூப் ; கனடா, காமரூன், நியுஜிலாந்து, நெதர்லாந்து

எஃப் குரூப் : அமெரிக்கா, தாய்லாந்து, சிலி, ஸ்வீடன்

ஒவ்வொரு குழுவிலும் வெற்றி பெறும் மற்றும் இரண்டாம் இடத்தில் வரும் அணிகள் 16 ஆவத் சுற்றில் விளையாட தகுதி பெறும்.  மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பெற்ற அணிகளில் அதிக புள்ளிகள் உள்ள நான்கு அணிகள் கால் இறுதிக்கு முதல் சுற்றில் விளையாட தகுதி பெறும்.

குழுக்களுக்கு இடையே ஆன லீக் ஆட்டங்கல் ஜூன் 7 முதல் ஜுனெ 21 வரை நடக்கும். 16 ஆம் சுற்றுக்களின் ஆட்டங்கள் ஜுன் 22 முதல் ஜுன் 25 வரை நடைபெறும்.    அதன் பிறகு ஒரு நாள் இடைவெளி விடப்படும்.

கால் இறுடி ஆட்டம் ஜூன் 27 அன்று தொடங்க உள்ளது.  அரை இறுதி ஆட்டம் ஜூலை 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடைபெறும்.   மூன்றாம் இடத்துக்கான போட்டி ஜூலை 6 அன்று நடைபெறும்.