‘யம தீபம்” என்பது என்ன.? எப்பொழுது, எதற்காக இந்த தீபம் ஏற்றப்பட வேண்டும்.?
தீபாவளிக்கு முதல் நாள் மாலையில் இந்த யெமதீபம் ஏற்ற வேண்டும். பெரிய அகல்விளக்கு ஒன்றில், முழுவதுமாக நல்லெண்ணை ஊற்றி திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
உங்கள் வீட்டு மொட்டைமாடி அல்லது மேற்கூரையில், மிக உயரமாக எவ்வளவு உயரம் வைக்க முடியுமோ அவ்வளவு உயரத்தில் யெமதீபத்தை தென் திசை நோக்கி வைக்க வேண்டும். இதனால் எமபயம் & மரண பயம் நீங்கும்.
தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யெம தீபம் ஏற்றுவது நம் மரபு. மரணபயம் நம்மைவிட்டு அகலவும் துர்மரணமின்றி அமைதியான மரணம் ஏற்படவும் யமதர்மராஜனை தவறாமல் வழிபட வேண்டும்.*
மஹாளய பட்ச நாட்களில் குறிப்பாக மஹாளய பட்ச அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த நாட்களில், பித்ருக்கள் மேலோகத்தில் இருக்கும் முன்னோர்கள் பூமிக்கு வருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள். அப்படி வருபவர்கள், தீபாவளி நாட்களில்தான் பித்ருலோகத்துக்கு திரும்புகின்றனர். அவர்களை வழியனுப்பும் பொருட்டு தீபமேற்றுதல் வேண்டுமாம்.
சாஸ்திரங்களும், தீபாவளிக்கு முதல் நாளான திரயோதசி திதி அன்று மாலை நேரத்தில் எம தீபம் ஏற்ற வேண்டும்.!’ என்கின்றன. அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவதுதான் “யெம தீபம்” என்பது.
எம தீபத்தை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவது வழக்கம்.*
இதற்கு வசதி இல்லாதவர்கள். வழக்கமாக ஸ்வாமிக்கு விளக்கேற்றும் போதே தனியே ஓர் அகல் ஏற்றி வழி படலாம். இதனால், முன்னோர்கள் மட்டுமின்றி எமதர்மரும் மகிழ்ச்சி அடைவார் என்பது ஐதீகம். விபத்துகள், திடீர் மரணம் போன்றவை சம்பவிக்காது. நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.!
யெம தீபமானது துர்மரணம் அடைந்தவர் களுக்கு முக்கியமானது. அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள். என்றாலும்.,*
எவரேனும் இறந்திருந்தால் மட்டுமே யெம தீபம் ஏற்ற வேண்டும் என்று எண்ணக் கூடாது.
யெம தீப வழிபாடாக, எட்டு அகல் விளக்குகளை ஆலயத்திலும், இல்லத்திலும், எட்டுத் திக்குகளிலும் தாமரைத் தண்டுத் திரிகளை வைத்து ஏற்றி, ஒவ்வொரு திக்காகப் பார்த்து, எட்டுத் திக்குகளில் நின்று, அந்தந்த திக்குகளை தேவமூர்த்தி, தேவதைகளை வணங்கிப் பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு எட்டுத் திக்குகளிலும் நின்று பூஜித்து, “யம தீப தேவதா மூர்த்திகளை உலக ஜீவன்களுக்கு உள்ள எமபயம், மரண பயம், மிருத்யு தோஷங்கள் அகலத் துணை புரிவீர்களாக என்று வேண்டிட வேண்டும்.
யெம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும். சொத்துகள் சேரும். அனைத்து விதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே அமையும். அத்தீபத்தை நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதசி திதியில் ஏற்ற வேண்டும். இது எப்போதும் தீபாவளிக்கு முதல் நாள் அன்று வரும். அன்றைக்கு மாலையில் யெம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கு வழிகாட்டி உதவுவது அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும்.
எம தீபம் ஏற்றவேண்டிய காலம் தீபாவளியின் முதல் நாளான (13/11/2020) சார்வரி வருஷம் ஐப்பசி மாதம் 28-ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 03-00முதல் 06-00 வரை.