அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வாஸ்து சாஸ்திரப்படி அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமாக திண்டுக்கல் உள்ளது. மேற்கு திசையில் மலையும், அதன் மீது கோட்டையும், அமைந்துள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோட்டை இன்றும் அழியாமல் உள்ளது.
இந்த கோட்டையிலிருந்து பழநிக்குச் சுரங்கப்பாதை இருப்பதாகவும், இந்த வழியாகப் பல முறை திப்புசுல்தான் பழநிக்கு சென்றாகவும் வரலாறு கூறுகிறது. இந்த மலைக்கோட்டையின் அழகான பின்னணியில்தான் இந்த அம்மன் கோயில் இருக்கிறது. இந்த கோட்டையால்தான் அம்மனும் கோட்டை மாரியம்மன் என அழைக்கப்படுகிறாள்.
அம்மன் அமர்ந்த கோலத்தில் இத்தலத்தில் எழிலுற வீற்றிருக்கிறாள்.
எட்டு கைகளுடன் காட்சி தரும் அம்மனின் வலது கைகளில் பாம்பு, சூலாயுதம், மணி, கபாலம், ஆகியவையும், இடது கையில் வில், கிண்ணம், பாம்பு, ஆகியவை காணப்படுகின்றது.