அறிவோம் தாவரங்களை – லெமன் கிராஸ்
லெமன் கிராஸ். (Cymbopogon Schoenanthus)
இந்தியா இலங்கை,பர்மா ,சீனா இந்தோனேசியா உன் தாயகம்!
உவர்மண்,கலர் மண் நிலங்களில் அதிகமாய் வளரும் மூலிகைப் புல் நீ!
இனிப்புப் புல் வாசனைப் புல் என இரு வகையில் அழைக்கப்படும் இனிய புல் நீ!
கேரளா, கோவை, தேனி, குமரி மாவட்டங்களில் அதிகமாய் பயிரிடப்படும் அழகு புல் தாவரம் நீ!
சாலட், சூப் எனப் பல வகையில் பயன்படும் நல்வகை புல் நீ!
வாதம், புற்றுநோய், காய்ச்சல், மூச்சு பிரச்சனை, தொண்டைப் புண், தோல் நோய்கள், அடி வயிற்று வலி,மூட்டு வலி, தலைவலி, செரிமான மண்டலக் கோளாறு, தசைச் சுருக்கம் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
துணி & பாத்திரம் துலக்கும் பவுடர், பினாயில் தயாரிக்க எண்ணெய் தரும் இனிய புல் நீ!
ஹெக்டேருக்கு 30. டன் வரை புல் கொடுக்கும் புனித தாவரமே!
90 நாட்களில் பலன் தரும் தொன்மை புல் தாவரமே!
வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் நாட்டுப் புல் தாவரமே!
எலுமிச்சை மணம் கொண்ட இனிய புல் செடியே!
இயற்கை கொசு விரட்டியே!
நறுமணத் தாவரமே!
நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்
நெய்வேலி.
📱9443405050.