அறிவோம் தாவரங்களை – வெள்ளரி

வெள்ளரி (Cucumis sativus).

தெற்கு ஆசியாவில் இருந்து வந்த  செடித் தாவரம்!

சீனாவை மணந்து கொண்டு  ஏராளமாய குழந்தை பெறும் படர் கொடிக்காய்!

3000ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த பச்சைக் காய்!

இங்கிலாந்து, கிரேக்கம் என எங்கும் குடியிருக்கும்  மஞ்சள் பூ நிறத்தழகி!

உடல் வெப்பம் போக்கி உள்ளத்தை மகிழ வைக்கும் குளிர்ச்சிக்காய்!

வெய்யிலுக்குப் பிஞ்சு தருவாய்!

குழம்புக்கு காய் கொடுப்பாய்!

பசி போக்கப் பழம் தருவாய்!

பச்சடிக்கும் பயன்படுவாய்!

பழைய சோறு திண்பதற்கு தொட்டுக்  கொள்ளும் ஊறுகாய்!

ஏழை விவசாயிகள் காசு பார்க்க விளையும் கோடைப்பயிர்!

வாதநோய் தீர்க்கும் மருந்துக்காய்!

வயிற்றுப் புண்ணைப் போக்கும்

நீர்க்காய்! முடி வளரவும் முகம் அழகு பெறவும் செய்யும் விதைக்காய்!

குடும்பத்தைக் குளிர வைக்கும்  அமுதே!

குழந்தையும் விரும்பி உண்ணும் கனியே!

நீவிர் கொம்புத்தேன்!

தமிழ் வாக்கு உள்ள வரை, கொடி நீண்டு குலம் சிறந்து வாழியவே!

நன்றி : பேரா.முனைவர் ச.தியாகராஜன்(VST).

நெய்வேலி.

📞9443405050.