அருள்மிகு ஶ்ரீ பாலாம்பிகை சமேத ஶ்ரீ  (செளந்தரேஸ்வரர்) கார்கோடேஸ்வரர் திருக்கோயில்,

திரு நல்லூர், கார்கோடீஸ்வரம், ரதிவரபுரம் காமரசவல்லி (கிராமம்), திருமானூர் வட்டம்,

அரியலூர் மாவட்டம்.

சுமார் 2000-வருடங்கள் பழமையான இந்த ஈசனாலயத்தில்,  கிழக்கு பார்த்த திருக்கோலத்தில் இறைவனும், தெற்கு பார்த்த திருக்கோலத்தில் இறைவியும் அழகு அருட்காட்சியளிக்கிறார்கள்.

  1. நாகங்களின் அரசனானகார்க்கோடகன்,ஶ்ரீ மகாவிஷ்ணுவின் அறிவுரைப்படி, இத்தல இறைவனான ஶ்ரீ செளந்தரேஸ்வரரை வழிபட்டு (கார்க்கோடகனும் மற்றும் அவர் வம்சமும்)  உயிர்பிழைத்த தலம்.
  2. இத்தல இறைவன் செளந்தரேஸ்வரரை கார்க்கோடகன் வழிபட்டதால், ஈசனின் திருப்பெயர்  கார்கோடேஸ்வரர் என்றழைக்கப்படுகிறது
  3. நாக அரசனுக்கு அருட்காட்சியளித்து  கார்க்கோடகனையும் அவர்  வம்சத்தையும் உயிர்ப்பித்த நாளும், நேரமும் கடக ராசி, கடக லக்னம் என்பதால், இந்த ராசிக்காரர்கள் இத்தல இறைவனை வழிபடக் கஷ்டங்கள், நாகதோஷம், கால சர்பதோஷம் போன்றவை விலகும் என்பது ஐதீகம்.
  4. தன் கணவனை (மன்மதனை)உயிர்பித்துத்தர, அவனது துணைவிரதிதேவி ஈசனை வழிபட்ட தலம்.
  5. ரதிதேவியின் வேண்டுதலால் நம் ஈசன், அவளின் கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரியுமாறு மாங்கல்ய பாக்கியம் அளித்தாராம்.   ரதிதேவி வழிபட்டதால், அக்காலத்தில் இச்சிவ தலத்தின் ஊர் ரதிதேவி புரம் என்றும் அழைக்கப்பட்டதாம்.
  6. சிவனாலயத்திற்குரிய முக்கியமான விழாக்கள் அத்தனையும் சிறப்புற நடைபெறும் இத்தலத்தில், சுமார் 45-புராதன கல்வெட்டுகளும், சிற்பங்களும் இந்த சிவாலய பெருமைகளைப் பல பல காலங்களைக் கடந்து இன்றும் பறைசாற்றுகிறது.
  7. தடைபெறும் திருமண நிகழ்வுகள் தடைநீங்கப்பெற்று நல்வாழ்கைத்துணை  அமையவும், கணவன் மனைவி கருத்தொற்றுமை மேலோங்கவும் இத்தல இறை தம்பதியினரை வழிபடுகிறார்கள்.