அறிவோம் தாவரங்களை – பயிற்றங்காய் கொடி
பயிற்றங்காய் கொடி.(asparagus bean).
ஆப்பிரிக்கா உன் தாயகம்!
4000 ஆண்டுகளுக்கு முன்பே பயிரிடப்பட்ட நல்ல கொடி நீ!
வானம் பார்த்த புன்செய் நிலத்தில் பயிரிடப்படும் நீளக்கொடி நீ!
அவரைக்கொடி உன் அண்ணன் கொடி!
தட்டைப்பயறு, காராமணிப் பயிறு என இரு வகையில் விளங்கும் இனிய கொடி நீ!
ஆப்பிரிக்கா,அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பயிரிடப்படும் பசுமைக்கொடி நீ!
25 செ.மீ.வரை உயரம் வளரும் நேர்த்திக் கொடி நீ!
நீரிழிவு, புற்றுநோய், சிறுநீரக பிரச்சனை, இதய நலம், உயர் ரத்த அழுத்தம், முகச்சுருக்கம், முடி வளர்ச்சி, உடல் எடை குறைப்பு, மலச்சிக்கல், எலும்பு வலிவு ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!
‘காரடையான்’ நோன்புக்கு காய் கொடுக்கும் கற்பகமே!
குழம்பு,பொரியல்,அவியல், துவட்டல்,துவையல், பணியாரம் என எல்லா வகையிலும் பயன்படும் நல்ல கொடியே!
கருப்பு, செந்நிற காய் கொடுக்கும் பசுமைக் கொடியே!
நார்ச்சத்து மிகுந்த காய்க் கொடியே!
ஹெக்டேருக்கு 10 டன் வரை மகசூல் தரும் பணப் பயிரே!
கால்நடைகளுக்கு ஏற்ற காராமணியே!
ஆண்டு முழுவதும் காய்க்கும் அற்புத கொடியே!
ஏழைகளின் அமிர்தமே!
நீவிர் பல்லாண்டு வாழ்க!வளர்க!உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்
நெய்வேலி.
📞9443405050.