அறிவோம் தாவரங்களை – தண்டுக்கீரை

தண்டுக்கீரை.(Amaranthus tricolor)

செம்மண் மணல் கலந்த இருமண் நிலங்களில் இனிதாய் வளரும் இனிய செடி நீ!

6 மீ வரை உயரம் வளரும் அழகு கீரைச்செடி நீ!

செங்கீரைத்தண்டு வெங்கீரைத் தண்டு என இருவகையில் விளங்கும் இனிய செடி நீ!

ரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி, உள் அழல், சிறுநீர் பிரச்சனை, கல்லீரல் நலம், நீர்த்தாரை கல் அடைப்பு,  அஜீரணம், மூலம், முதுகெலும்பு பலம், ரத்த சுத்திகரிப்பு, கொழுப்புக் குறைப்பு,பித்தம்,  குடற்புண் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

அவியல், பொரியல், மசியல் எனப் பல வகையில் பயன் தரும் நல்வகை தண்டுக் கீரையே!

விட்டமின் ஏ & சி இரும்புச்சத்து,  நார்ச்சத்து கொழுப்புச்சத்து கொண்ட தண்டுக்கீரையே!

6 மாதங்கள் வரை வாழும் அரிய கீரை செடியே!

எலும்பு மஜ்ஜையை வளர்க்கும் இனிய செடியே!

சுவைமிகுந்த இலைகீரையே!

 கண்ணுக்குக் குளிர்ச்சி தரும் கற்பக கீரையே!

நினைவாற்றலைவளர்க்கும் மருந்து கீரைச் செடியே!

அழகையும் ஒளியையும் தரும் அற்புத தண்டுக கீரையே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க!உயர்க!

நன்றி : பேரா.முனைவர்.ச.தியாகராஜன்((VST)

நெய்வேலி.

📞9443405050