அறிவோம் தாவரங்களை – பொன்னாங் கண்ணி செடி
பொன்னாங் கண்ணி செடி. (Alternanthera sessilis).
ஈரமான இடங்களில் வளரும் இனிய செடி நீ!
கீரைகளின் ராணி நீ!
0உலக நாடுகளில் உணவாய் பயன்படும் உன்னத செடி நீ!
சீமை பொன்னாங் கண்ணி , நாட்டுப் பொன்னாங் கண்ணி என இரு வகையில் விளங்கும் தரை படர் செடி நீ!
சீதை, ஸ்ரீதேவி, கொல்லை எனப் பல்வேறு பெயர்களில் பரிணமிக்கும்பசுமைச்செடி நீ!
கண் பார்வை அதிகரிக்கும் கண்மணி செடி நீ!
கண் எரிச்சல்,கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் நீர் வடிதல், கண் பீளை தள்ளுதல், வாய் நாற்றம், வாய்ப் புண் இரத்த சுத்திகரிப்பு, மூல நோய் மண்ணீரல் நோய், இதய நலம் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி
நீ ’காசம் புகைச்சல் கருவிழி…பொன்னாங் கண்ணி கொடியைப்போற்று’ என அகத்தியர் குணபாடம் போற்றும் மருத்துவச்செடி நீ !
சூப்தயாரிக்க இலை தரும் இனியசெடியே!
பச்சையாகவும் சமைத்தும் உண்ணப் பயன்படும் உணவு செடியே!
பகலில்கூட நட்சத்திரங்களைப் பார்க்கும் படி கண்ணொளியைக் கூட்டி கொடுக்கும் நாட்டு மருந்து செடியே!
தைலம் தயாரிக்கப் பயன்படும் தங்கச்செடியே!
கரும்பச்சை நிறம் கொண்ட நீர்ச்சத்து செடியே!
வெள்ளை நிற பூப்பூக்கும் நல்ல செடியே!
பொன்போன்றமினுமினுப்பைதரும் கீரைச் செடியே!
உடலுக்குப் புத்துணர்ச்சி தரும் உன்னத கீரைச்செடியே!
குளிர்ச்சியைக் கொடுக்கும் கற்பக செடியே!
அழகுக்காக வளர்க்கப்படும்அற்புதசெடியே!
நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க!உயர்க!
நன்றி : பேரா.முனைவர்.
ச.தியாகராஜன்(VST)
நெய்வேலி.