வைரலாக பரவி வரும் வாட்ஸ்அப் குறித்த புதிய அதிர்ச்சி செய்தி : உண்மை என்ன?

Must read

டில்லி

வாட்ஸ்அப் மூலம் விவரங்கள் திருடப்படுவதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகி உள்ளன.

சமீபகாலமாக மொபைல் மூலம் வங்கி மற்றும் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல விஷாங்களை மக்கள் செய்து வருகின்றனர். இதற்கான விவரங்கள் மொபைலில் உள்ளதல் அந்த மொபைலை சில செயலிகள் மூலம் ஊடுருவி விவரங்களை திருடலாம் என பல தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக தளங்கள் மூலம் இத்தைகைய செயல்கள் நடப்பதாக பல செய்திகள் வந்துள்ளன.

தற்போது வாட்ஸ்அப் கோல்ட் என்னும் செயலியை தரவிறக்கம் செய்யலாம் என ஒரு சிலர் பரிந்துரை செய்கின்றனர். அதே நேரத்தில் அது தவறானது எனவும் தரவிறக்கம் செய்தால் விவரங்கள் திருடப்படும் எனவும் பயமுறுத்தலும் தொடர்கிறது. பிரபல பொறியியல் நிறுவனத்தின் துணைத் தலைவரான வெங்கட் கிருஷ்ணாபூர் இந்த செயலி விவரங்களை திருடக் கூடியது என தெரிவிக்கிறார்.

வெங்கட் கிருஷ்ணாபூர், ”இந்தியாவில் சுமார் 20 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் அதிக அளவில் சொந்த தகவல் பரிமாற்றமும் நடைபெற்று வருகிறது. கடந்த 2016 ஆம் வருடம் இந்த வாட்ஸ்அப் கோல்ட் என்னும் செயலி முடக்கப்பட்டதாகும். ஆனால் தற்போது அதை மீண்டும் நிறுவ வேண்டும் என கேட்கப்படுகிறது.

இதன் மூலம் வாட்ஸ்அப் பயனாளிகள் ஒரே நேரத்தில் 100 புகைப்படங்களுக்கு மேல் அனுப்ப முடியும் என சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் “நாளை வாட்ஸ்அப் கோல்ட் எவ்வாறு செயல்படுகிறது என ஒரு வீடியோ வரும். அதை திறந்தால் வைரஸ் பரவ்ம். அந்த வைரஸை நீக்க ஆண்டி வைரஸ் கிடையாது. எனவே வாட்ஸ்அப் குறித்த எந்த தகவலையும் திறக்க வேண்டாம்” என மற்றொரு செய்தி வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் செய்திகள் மற்றும் வீடியோக்கள் பகிரும் போது பகிரப்பட்டது என மட்டுமே வரும். இந்த செய்தியை யார் முதலில் அனுப்பியது என கண்டுபிடிக்க இயலாது. ஆகவே வாட்ஸ்அப் செயலி என்னும் பெயரில் பல போலி செயலிகள் உலவுவதால் அந்த செயலிகள் உங்களின் விவரங்களை திருட வாய்ப்பு உள்ளது.” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

More articles

Latest article