புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று விமர்சையாக நடைபெற்ற 70வது குடியரசு தினவிழாவில், மொத்தம் 141 பிரபலங்களுக்கு பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் அமர்சேவா சங்க நிறுவனம் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் டிவிஎஸ் வேணு ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்பட்டன.

பத்ம விபூஷன் விருது பெற்றவர்களில், மறைந்த ஜார்ஜ் பெர்ணான்டஸ், அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

விருதுபெற்றவர்களின் பெயர், அவர்களின் மாநிலம் மற்றும் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டத் துறை உள்ளிட்ட விரிவான விபரங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

[youtube-feed feed=1]