கொழும்பு: ‘பெரும்பான்மை இருப்பதால் ஜனநாயகத் தன்மையை அழிப்பதா?’ என இலங்கை அரசுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பி உள்ளார்.
இலங்கையில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ராஜபக்ஷே கட்சியின் தலைமையிலான கூட்ட்ணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. ராஜபக்ஷே மீண்டும் பிரதமர் பதவியேற்றார். நாட்டின் அதிபராக ராஜபக்சேவின் சகோதரர் கோத்பய ராஜபக்சே இருந்து வருகிறார். இதனால், அவர்களின் ஆட்டம் தீவிரமாகி உள்ளது.
ராஜபக்சே தலைமையிலான மந்திரி சபை கடந்த ஆகஸ்டு மாதம் 12ந்தேதி பதவி ஏற்றது. இதில், 28 கேபினட் மற்றும் 40 ராஜாங்க மந்திரிகள் உள்ளனர். இவர்களில் ராஜபக்சே குடும்பத்தில் 4 பேர் மந்திரியாகி இருக்கிறார்கள். மேலும் தமிழர்கள் 4 பேருக்கும் பதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.
ராஜபக்சே கட்சி அங்கு பெரும்பான்மையுடன் திகழ்வால், தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையை மீண்டும் தீவிரப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே, இலங்கை தமிழர்களுக்காக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி , அபோதைய இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனே இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தையே ரத்து செய்ய பக்சே சகோதரர்கள் முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது, இலங்கை சட்டத் திருத்தம் 19-யை ரத்து செய்து, புதிதாக 20-ம் சட்டத் திருத்தம் செய்ய முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. புதிய சட்டம் திருத்தம் அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு எல்லை மீறிய அதிகாரங்களை வழங்குவதாக உள்ளது.
அதன்படி, அந்நாட்டின் அதிபர் கோத்தபய முடிவு செய்தால், பாராளுமன்றத்தை எப்போது வேண்டுமானாலும் கலைக்க லாம், மேலும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரம் அளிக்கப்படுகிறது.
இந்தச் சட்டத்திருத்தத்திற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ன. இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட வருகிறது.
இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே, அதிபரின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,
’தேசிய பட்டியல் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்குள் கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகளை களைய எல்லோரிடமும் பேச வேண்டும். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருப்பதால் 19 –ம் சட்டத்திருத்தத்தின் ஜனநாயகத் தன்மையை அழிக்க நினைக்க கூடாது. அதேபோல மரண தண்டனை அளிக்கப்பட்ட குற்றவாளியை பாராளு மன்றத்திற்கு அழைப்பதும் சரியாக இருக்காது’ .
இவ்வாறு கூறியுள்ளார்.