சென்னை
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில்ல் ஆய்வு நடத்தியுள்ளார்.
நேற்று வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல், இன்று மதியம் அல்லது இரவுக்குள் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்றிரவு சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் ஓட்டல்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நடவடிக்கைகளை குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார் . உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர் சேகர் பாபு,மேயர் பிரியா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.