லக்னோ :

த்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதிக்கு செல்வதற்கு, காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு உ..பி.காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மாநில அரசின் அவலங்களை மக்கள் மத்தியில் எடுத்துரைப்பார் என்று பயந்தே உ.பி. மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது என்று  கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., அரசு  ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள அமேதி லோக்சபா தொகுதி எம்.பி.யாக அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகல்காந்தி உள்ளார். அவர் வரும் 4 மற்றும் 5ந்தேதி தனது தொகுதியில் சுற்றுப்பயணம் செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியிருந்தார்.

ஆனால் தசரா பண்டிகையை காரணம் காட்டி ராகுல் காந்தி பயணத்துக்கு மாவட்ட நிர்வாகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, உ.பி., காங்கிரஸ் மூத்த தலைவர், அகிலேஷ் சிங் கூறியதாவது,

அமேதி தொகுதி சுற்றுப்பயணத்தின்போது, மாநிலத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து ராகுல் மக்களிடையே  பேசுவார் என்பதால் அவருடைய பயணத்துக்கு உ.பி., அரசு அனுமதி தர மறுத்துள்ளது.

ராகுலின் அமேதி பயணம் அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு எம்.பி., தனது தொகுதிக்கு செல்ல அரசு அனுமதி மறுப்பு தவறு என்று கூறி உள்ளார்.