ஐதராபாத்:
25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தொழிலாளர் நலத்துறையின் துணை தலைமை கமிஷனரை சிபிஐ கைது செய்துள்ளது.
கறுப்பு பணத்தை முடக்கும் வகையில் மக்களிடையே புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ந் தேதி அறிவித்தது.
 

 l

இதை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர், சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி, கட்டுக்கட்டாக பணத்தை கைப்பற்றி வருகின்றனர்.
சென்னையில் தொழிலாளர் நலத்துறையின் துணை தலைமை கமிஷனராக பணியாற்றி வருபவர் ஸ்ரீவத்சவா. இவர் ஐதராபாத் தொழிலாளர் நலத்துறையின் துணை தலைமை ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். இவர் ஒரு பணியை முடித்து கொடுக்க ரூ.25,000 லஞ்சம் பெற்றபோது சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பணமதிப்பிறக்கத்தால் லஞ்சம் ஊழல் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.