லக்னோ:

பணமதிப்பிழப்பில் தாக்கம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு பின்னரும் கிராமப் புற இந்தியாவில் நீடித்து வருகிறது. இதில் உ.பி. மாநிலத்தல் நாட்டின் 30 சதவீத உருளை கிழங்கை உற்பத்தி செய்யும் பகுதி வெகுவாக பாதித்துள்ளது.

கிராமப் புறங்களில் உள்ள வங்கிகளும், ஏ.டி.எம்.களும் பணமத்திப்பிழப்பு பாதிப்பில் இருந்து மீண்டு வந்த இறுதிப் பகுதிகளாக உள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் தான் கிராமப் புறங்கள் சகஜ நிலைக்கு திரும்ப முடிந்தது என்று வங்கி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிகம் பாதித்த கிராமப் புறங்களில் இன்னும் ரொக்க புழக்கம் முந்தைய நிலைக்கு திரும்பவில்லை. தினசரி ரொக்க தேவையில் 60 சதவீதம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது. மதியம் 2 மணிக்குள் கையிருப்பு ரொக்கம் தீர்ந்துவிடுகிறது’’ என்றார்.

பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட இந்தபிரச்னை ரொக்க பரிமாற்றத்தை நம்பியிருந்த பல சந்தைகளை அழித்துள்ளது. இதில் விவசாய மொத்த விற்பனைக்கு தான் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. இதில் ரொக்கம் மட்டுமே பிரதான பரிமாற்றமாக இருக்கும். ரொக்க பற்றாகுறை காரணமாக உருளைகிழங்கு மொத்த சந்தை வெகுவாக பாதித்துளளது.

2016ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்த ஜனவரி மாதம் வரை உருளை கிழங்கு மொத்த விற்பனை குறித்து 3 மண்டிகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒரு குவிண்டால் உருளை விலை ஆயிரத்து 400க்கு 2016ம் ஆண்டு விற்பனையானது. இது தற்போது சுமார் 400 ரூபாய் விற்பனையாகிறது என்று சராசரி கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட சமயத்தில் 2016 நவம்பர் மாதம் ஒரு குவிண்டால் ரூ.916க்கு விற்பனையானது. இது அதே ஆண்டு டிசம்பர் மாதம் 41 சதவீதம் விலை குறைத்து ரூ. 532க்கு விற்பனையானது. ஒரே மாதத்தில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சரிவில் இருந்து உருளைகிழங்கு சந்தை இன்னும் மீண்டு வரவில்லை. தற்போதும் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நொந்துபோயுள்ளனர்.

2016ம் ஆண்டு பிப்ரவரியில் 155 லட்சம் டன் உருளைக்கிழங்கு உ.பி.யில் உற்பத்தி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2017&18ம் ஆண்டில் 3.05 கோடி டன் உருளை உற்பத்தியாகும் என்று மத்திய வேளாண் துறை தெரிவித்துள்ளது.