டில்லி

ணமதிப்பு குறைப்பு காலம் என சொல்லப்படும் இரண்டரை மாதக் காலத்தில் டில்லியில் பழைய ரூபாய் நோட்டுக்கள் ரூ 56665 கோடி டிபாசிட் செய்யப்பட்டு, நாட்டில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

வருவாய்த்துறை அமைச்சகம் வெளியுட்டுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள மும்பையில் ரூ. 35.272 கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரக அதிகாரிகள், மும்பையில் அதிக பணம் டிபாசிட் ஆகலாம் எனவும், டில்லியில் இவ்வளவு டிபாசிட்டை எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

அதே போல சூரத், லக்னோ போன்ற சிறிய நகரங்களிலும் எதிர்பார்த்த தொகையை விட அதிகம் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.

இது லக்னோ மட்டுமின்றி, உத்தரப் பிரதேசத்தின் பல நகரங்களில் எதிர்பார்த்ததை விட அதிகமாக டிபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது

இந்த காலகட்டத்தில் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய்கள், 98 லட்ச வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதாவது சராசரியாக ஒவ்வொரு அக்கவுண்டிலும் ரூ. 10 லட்சம் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.

அதே போல இந்த நாட்களில் மட்டும் திடீரென ரூ. 2லட்சத்துக்கு மேல் டிபாசிட் செய்யப்பட்ட கணக்குகளை முழுமையாக பரிசோதித்த பின் பினாமி கணக்குகளில் எத்தனை ரூபாய்கள் டிபாசிட் செய்யப்பட்டன என்பதும் தெரியவரும்.

இந்த பணம் முழுவதுமே கறுப்புப் பணமாகவே இருக்கக்கூடும்.

இதுவரை 17.92 லட்சம் கணக்குகள் சந்தேகத்துக்குரியவையாக கருதப்படுகிறது..

அந்த கணக்கை வைத்திருப்பவர்களுக்கு விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுகள், SMS, ஈ மெயில், மற்றும் கடிதங்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு இதுவரை 9.46 லட்சம் பேர் வரை பதில் அளித்துள்ளனர்.

பதிலளிக்காதவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.