டெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை குறைக்க உதவியதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.

2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி மத்தியில் ஆளும் பாஜக அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தது. இதையடுத்து, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டது.

இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு. இன்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில் கூறி இருப்பதாவது:

பணமதிப்பிழப்பு நடவடிக்கை , கருப்பு பணத்தை குறைக்கவும், வரிகளை முறைப்படுத்த வெளிப்படைத் தன்மைக்கு ஊக்கம் தந்தது. இந்த முடிவுகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியது என்று பதிவிட்டுள்ளார்.