ஜிந்:

ஹரியானா மாநிலத்தில் பள்ளிகளை தரம் உயர்த்தக் கோரி மாணவர்களும், பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜிந் பகுதியில் பள்ளியை தரம் உயர்த்தக் கோரி 50 மாணவிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம பல்வால் பகுதியில் கிர்பி கிராமத்தில் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரி அரசு சார்பில் நடத்தப்படும் இந்த ஆரம்ப பள்ளியின் ஆசிரியர்களை பள்ளியின் உள்ளேயை சிறைவைத்து பெற்றோர் போராட்டத்தில் ஈ டுபட்டுள்ளனர்.

ஆசிரியர்கள், பணியாளர்கள் பற்றாகுறையால் தங்களது குழந்தைகளில் கல்வி பாதிக்கப்ப டுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதேபோல் ரிவாரி மற்றும் குருகிராம் பகுதியில் சில கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தொடர்ந்தே ஜிந் மற்றும் பல்வாலில் போராட்டம் வெடித்துள்ளது.

தகவலறிந்த மாவட்ட கல்வி அலுவலர் அனில் ஷர்மா விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

ஜிந் பகுதியில் கரசோலா அரசு உயர்நிலைப் பள்ளி நுழைவு வாயில் கதவை பூட்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜூலானா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சந்திரபான் கூறுகையில், ‘‘ பள்ளி முதல்வர், ஆசிரியர்களை உள்ளே விடமால் போராட்டம் நடக்கிறது’’ என்றார்.

‘‘பள்ளி தரம் உயர்த்தப்படும் என அரச உத்தரவாதம் அளிக்கும் வரை பள்ளி கதவு திறக்கப்படாது’’ என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஜூலானா கல்வி அதிகாரி ஆதர்ராஜன் கூறுகையில், ‘‘ பள்ளியை தரம் உயர்த்துவது தொடர்பாக கல்வி துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது’’ என்றார்.