மதுரை:
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடைக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை எம்பி ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட வினாக்களில் 40க்கும் மேற்பட்ட வினாக்கள் தவறாக உள்ளது என்பதை குறிப்பிட்டு காட்டியிருந்தார்.
ஆனால், மனு மீதான விசாரணை தொடங்குவதற்குள் சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்த நேரத்தை விட முன்கூட்டியே வெளியிட்டு விட்டதால், வழக்கின் விசாரணையை நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்ற கிளை அறிவித்து உள்ளது.
இன்று காலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மதுரை உயர்நீதி மன்ற கிளையில் விசாரணை நடைபெறுவதற்கு முன்பே தேர்வு முடிவுகளை வெளியிட்டு விட்டது சிபிஎஸ்இ.