சென்னை: தொகுதி மறுவரையறை பிரச்சினை தொடர்பாக சென்னை மெரினாவில் முதல்வர் ஸ்டாலின் உருவமுடன் மணற்சிற்பம் அமைக்கப்பட்டு உள்ளது.
தொகுதி மறுவரையறை தொடர்பாக இன்று முதலமைச்சர் ஸ்டாலின் நடைபெறவுள்ள 7 மாநிலங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்திற்காக சென்னை மெரினா கடற்கரையில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மணல் சிற்பத்தில், ஸ்டாலின் கையில் தீப்பந்தம் ஏந்தி நின்றுகொண்டு. ‘தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!’ என எழுதப்பட்டுள்ளது.
நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளை மக்கள் தொகையின் அடிப்படையில் மறு சீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் எண்ணுகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக 7 மாநில பிரதநிதிகளை சந்தித்து ஆதரவு திரட்ட குழு அமைக்கப்பட்டது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது.
தொகுதி மறுவரையறை தொடர்பாக இன்று நடைபெறவுள்ள 7 மாநிலங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் முதல்வர் ஸ்டாலின் உருவம் பொறித்த மணல் சிற்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை சுற்றி பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.