டில்லி

ஜி எஸ் டி குறித்து ஒரு டிப்ளமோ கோர்ஸ் டில்லி பல்கலைக்கழக வணிகவியல் துறையில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என ஒரு அறிவிப்பு கூறுகிறது.

இந்த மாதம் முதல் தேதி முதல் நாடெங்கும் ஜி எஸ் டி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.  ஒரு நாடு ஒரே வரி என்னும் கோஷத்துடன் வந்துள்ள ஜி எஸ் டி க்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.  அதே நேரத்தில் வரவேற்புக்கு இணையாக எதிர்ப்பும் உள்ளது.   எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கும் முக்கிய கருத்து, இந்த ஜிஎஸ்டி ஒன்றும் புரியவில்லை என்பதே.

டில்லி பல்கலைக்கழகம் ஜி எஸ் டி குறித்த டிப்ளமோ படிப்பு விரைவில் அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.   வணிகவியல் துறையில் இந்த டிப்ளமோ வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.   இந்த சட்டத்தில் உள்ள நான்கு அடுக்கு வரிமுறைகளைப் பற்றி விவரமாக தெரிந்துக் கொள்ள இந்த டிப்ளமோ படிப்பு உதவும் என சொல்லப்படுகிறது.

இது தவிர சைபர் கிரைம் சட்டம் பற்றியும் ஒரு டிப்ளமோ படிப்பு கொண்டு வரப்படும் என டில்லி பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.  இந்த படிப்பு அறிவியல் துறையின் கீழ் கொண்டுவரப்படும்.   இது இணைய தளக் குற்றங்களை பற்றி ஆராயும்.  ஒவ்வொரு பிரிவிலும் 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என அந்த அறிவிப்பு கூறுகிறது,

டில்லி பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பை கல்வி ஆர்வலர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.