புதுடெல்லி:
5 மாநிலங்களில் இருந்துமிருந்து டெல்லி வருபவர்களிடம் கொரோனா அறிக்கை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா, கேரளா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாபி ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அந்த மாநிலங்களிலிருந்து வருபவர்கள் வரும் 26ஆம் தீதி முதல் எதிர்மறையான கொரோனா சோதனை அறிக்கையை எடுத்துச் வருவது அவசியம் என்று டெல்லி அரசு அறிவிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரா, கேரளா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாபிலிருந்து விமானங்கள், ரயில்கள் அல்லது பஸ்கள் மூலம் டெல்லிக்கு வரும் மக்கள் சனிக்கிழமை முதல் மார்ச் 15 வரை எதிர்மறையான ஆர்டி-பிசிஆர் சோதனையைக் காட்ட வேண்டும் என்றும், சாலை வழியாக டெல்லிக்குள் வருபவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ உத்தரவுகள் இன்று பிற்பகுதியில் வழங்கப்படும் என்றும் அந்த தகவலில் தெரிவிக்கபட்டுள்ளது.

கடந்த வாரத்தில், 86 சதவீத புதிய கொரோனா பாதிப்புகள் இந்த மாநிலங்களிலிருந்து வந்த மக்களால் ஏற்பட்டுள்ளதை அடுத்து டெல்லி அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.