டெல்லி: டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்ட சுற்றுச்சூழலியல் ஆர்வலர் திஷா ரவிக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. தலா ரூ.1லடசம் வீதம் 2 நபர்கள் ஜாமின் தொகை கட்டி, திஷா ரவியை ஜாமினில் அழைத்துச்செல்லலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது.
விவசாயிகள் போராட்டம் தொடர்பான டூல் கிட் பகிர்ந்து தொடர்பான வழக்கில்,கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுச் சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை, டெல்லி போலீசார் கடந்த 13ம் தேதி பெங்களூருவில் கைது செய்தனர். அவரை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திஷா ரவி கைது செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து திஷா ரவி சார்பில் ஜாமின் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுமீதான விசாரரண 20ந்ததி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திஷா ரவியின் நீதிமன்றக் மேலும் 3 நாள்கள் நீட்டிக்கப்பட்டதுன் தீர்ப்பும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இன்று திஷா ரவி ஜாமின் வழங்கில் டெல்லி அமர்வு நீதிமன்றம் ஜாமின் வழங்கி தீர்ப்பு வழங்கி உள்ளது. தலா ரூ.1 லட்சம் என 2 நபர் சூரிட்டி வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.