காற்று மாசால் சுகாதார ‘நெருக்கடி நிலை!’ டெல்லியில் பள்ளிகளுக்கு 5ந்தேதி வரை விடுமுறை அறிவிப்பு

Must read

டெல்லி

தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசால் டெல்லியில் சுகாதார ‘நெருக்கடி நிலை’அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி  பள்ளிகளுக்கு 5ந்தேதி வரை விடுமுறை விடப்படுவதாக மாநில அரசு அறிவித்து உள்ளது.

டில்லியில் தற்போது காற்று மாசின் அளவு உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று  நள்ளிரவு 12.30 மணி அளவில் 582 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி காற்று மாசின் அளவு 459 புள்ளிகளை எட்டியுள்ளது. காற்றின் மாசு 48 மணிநேரம் நீடிப்பதால்  மக்கள் சுவாசிப்பதற்கே சிரமப்படும் சூழல் எழுந்துள்ளது.இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொது சுகாதார அவசர நிலையை அறிவித்து உள்ளது.

இதையடுத்துடெல்லியில் வரும் 5 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை டெல்லியில் காற்று மாசு அதிகமாக உள்ள நிலையில், அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாக மாநில முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.

காற்றின் தரம் குறித்த குறியீடு

காற்று தரக் குறியீட்டின்பட், 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் நல்லது,

51-100 புள்ளிகள் வரை இருந்தால் மனநிறைவு, 101-200வரை புள்ளிகள் இருந்தால் மிதமானது,

201-300 புள்ளிகள் இருந்தால் மோசம்,

301-400 வரை இருந்தால் மிக மோசம்,

401-500 புள்ளிகள் இருந்தால் மிகத்தீவிரம்,

500 புள்ளிகளுக்கு மேல் சென்றால் மிகத்தீவிரம் அல்லது நெருக்கடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில்ல நேற்று நள்ளிரவு 582 புள்ளிகளைத் தொட்டு இன்று காலை முதல் டெல்லியில் 450 புள்ளிகளுக்கு மேல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே காற்று மாசில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு 50 லட்சம் மாஸ்க்குகளை மாநில அரசு இன்று காலை முதல் வழங்கி வருகிறது.

More articles

Latest article