டெல்லி: டெல்லியில் இன்று 2,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று ஒரே நாளில் 39,306 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 2,258 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதையடுத்து, ஒட்டுமொத்தமாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2, 87,930 ஆக உயா்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 34 போ் உயிரிழக்க, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 5,472 ஆக உயா்ந்துள்ளது.
இன்னமும் 2, 57,224 பேர் சிகிக்சையில் உள்ளனர். 3,440 குணமடைய இதுவரை 2, 57,224 சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நகரில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 2,658 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Patrikai.com official YouTube Channel