டெல்லி:
டெல்லியில் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி ஓய்வுக்கு பின் வசிப்பதற்கான பங்களா தயாராகி வருகிறது.

இதற்கு ஏற்பட அங்கு வசித்து வந்த மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா டெல்லி லுத்யன்ஸ ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்துள்ளார்.
அங்கு புணரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பங்களாவில் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி ஓய்வுக்கு பிறகு தங்கவுள்ளார்.

இந்த பங்களாவை கடந்த 2015ம் ஆண்டு வரை மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வசித்து வந்தார். அதன் பிறகு மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Patrikai.com official YouTube Channel