டில்லி:

நாடாளுமன்ற சட்ட ஆலோசகராக இருப்பதாக கூறப்படும்  ராமசாமி என்பவரின் 3வது மனைவியாக சசிகலா புஷ்பா எம்.பி. நேற்று திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், ராமசாமியின் முதல் மனைவியின் மகள் கொடுத்துள்ள புகாரின் பேரில், ராமசாமியின் 2வது மனைவி சத்தியப்பிரியா மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நேற்றுதிருமணம் செய்து கொண்ட அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவின் 2வது கணவர் ராமசாமி மீது  அவரது 2வது மனைவி சத்தியப்பிரியா தனது குழந்தையுடன் மதுரை காவல்துறையில் புகார் கூறியிருந்தார். அதைத் தொடர்து குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ராமசாமி 3வது திருமணம் செய்ய தடை வாங்கி யிருந்தார்.

இந்நிலையில், கோர்ட்டு உத்தரவை மீறி, நேற்று ராமசாமி, சசிகலாபுஷ்பா திருமணம் டில்லியில் நடைபெற்றது.

இந்நிலையில், சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமியின்  முதல் மனைவியின் மகள் அஞ்சலி என்பவர் கடந்த 2014ம் ஆண்டு சத்தியப்பிரியா மீது கொடுத்த புகாரின் மேல், தற்போது டில்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தனது முதல் மனைவியின் மகளான அஞ்சலியை சத்யப்பிரியா கொடுமைப்படுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.