டெல்லி பவானாவில் வசித்து வந்த குல்தீப் என்ற நபர் மீதான கற்பழிப்பு வழக்கில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 1,500 கி.மீ. துரத்திச் சென்று அவரை கைது செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் தியோரியாவைச் சேர்ந்த குல்தீப் (25) டெல்லி பக்வான் புராவில் பணிபுரிந்து வந்தார்.

அங்கு அவருடன் பணிபுரிந்து வந்த ஒரு பெண்ணுடன் நட்பாகப் பழகி வந்த குல்தீப் சமயம் பார்த்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அந்த பெண்ணை கற்பழித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை காட்டி மிரட்டி வந்த அந்த நபர் அவருடன் அடிக்கடி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் குல்தீப்பின் அத்துமீறலை சகித்துக்கொள்ள முடியாத அந்த பெண் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து குல்தீப் தலைமறைவானதை அடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது காவல்துறை.

தவிர, அவரை தொடர்ந்து தேடி வந்த நிலையில் அவர் சூரத்தில் உள்ள ஜெய் அம்பே நகரில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து குஜராத் மாநிலம் சூரத் சென்ற டெல்லி குற்றப்பிரிவு போலீசார் குலதீப்பை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து மொபைல் போனை கைப்பற்றியுள்ள போலீசார் அதில் அவர் மிரட்டலுக்காக வைத்திருந்த புகைப்படங்களையும் கைப்பற்றியுள்ளனர்.