புதுடெல்லி: லாஸ் ஏஞ்சலிஸ் மற்றும் லண்டன் நகரங்களைவிட, இந்தியாவின் டெல்லி & மும்பை நகரங்களில் கஞ்சா பயன்பாடு அதிகம் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இப்பட்டியலில், உலகிலேயே முதலிடத்தில் உள்ள நகரம் நியூயார்க். அடுத்ததாக பாகிஸ்தானின் கராச்சி உள்ளது. மூன்றாவது இடத்தில் டெல்லியும், நான்காவது இடத்தில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரமும் உள்ளது.
மும்பை 6வது இடத்திலும், லண்டன் 7வது இடத்திலும் உள்ளன. உலகளவில், கஞ்சா மிகவும் மலிவாக கிடைக்கும் இடங்களில் டெல்லியும் உள்ளதாக கூறப்படுகிறது.
தென்அமெரிக்க கண்டத்தின் 5 நகரங்கள், குறைந்தவிலையில் கஞ்சா கிடைக்கும் இடங்களில், முதல் 10 இடங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. டெல்லியும் மும்பையும், அந்தப் பட்டியலில் 10வது மற்றும் 11வது இடத்தில் வருகின்றன.
இந்தியாவில் கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்குவதில் ஏற்படும் தோல்வி, இங்கே பெரியளவிலான வரி வருவாய் இழப்பை ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.