டெல்லி:

சிறுவர்கள் வாகனங்களை ஓட்டுவதா அதிக அளவில் விபத்துக்கள் நடந்து வருகிறது. அதிவேக டூவீலர்களை காட்டுமிராண்டித்தனமாக ஓட்டி பல விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

18 வயது நிரம்பியவர்கள் தான் வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால், இதை யாரும் மதிப்பது கிடையாது. இது பல உயிர்களை தினமும் காவு வாங்கி கொண்டிருக்கிறது. இப்படி தான் வடமேற்கு டெல்லியில் சிறுவன் ஒருவன் காரை ஓட்டினான். முறையான பயிற்சி இல்லாமல் அசுர வேகத்தில் ஓட்டிய காரை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது கார் பயங்கரமாக மோதியது.

அதோடு, அருகில் சென்ற மற்றொரு காரோடு அந்த பெண்ணை இடித்து நசுக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டான். அப்பகுதி மக்கள் தடுத்தும் அவனை பிடிக்க முடியவில்லை.
இதில் அந்த பெண் படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக அந்த சிறுவனின் தந்தை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண், கார் மீது சிறுவன் ஓட்டிய கார் மோதும் வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பலரது கண்டனம் குவிந்து வருகிறது.

[embedyt] http://www.youtube.com/watch?v=PnAJUnGoDcU[/embedyt]