டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தெலுங்கான மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகளும், தெலுங்கானா  மாநில எம்எல்சியுமான  கவிதாவின் காவல் ஜூலை 3 வரை நீடிப்பு செய்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற மதுபான கொள்ளை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், துணைமுதல்வர் சிசோடியா உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த முறைகேட்டில் தொடர்புள்ளதாக கூறி, தெலங்கானா முன்னாள் முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகள் கே.கவிதா வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து ரெய்டு நடத்தியது. அதைத்தொடர்ந்து,   அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 15-ஆம் தேதி ஹைதராபாத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் இ கவிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

ஏற்கனவே இந்த   மதுபான (கலால்) கொள்கை முறைகேடு தொடா்பான ந்த வழக்கில் பிஆர்எஸ் எம்எல்சி கவிதாவுக்கு  எதிரான குற்றப்பத்திரிக்கை மே 29 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் நீதிமன்றம் பிடிவாரண்டுகளை பிறப்பித்தது. இதைத்தொடர்தந்து  குற்றம் சாட்டப்பட்ட மேலும்  மூவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், கவிதாவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கவிதாவின் காவலை,  ஜூலை 3 வரை நீட்டித்து  சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா  உத்தரவிட்டார்.