டெல்லி: டெல்லி ஆம்ஆத்மி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் சிசோடியா, பிஆர்கட்சி எம்எல்சி கவிதாவின் நீதிமன்ற காவலை நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது.
டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னாள் , துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, பிஆர்எஸ் தலைவர் கவிதா ஆகியோரின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறையின் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போத, இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, கவிதா ஆகியோர் காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணையைத் தொடர்ந்து அவர்களின் காவல் ஆகஸ்டு 8ந்தேதி வரை நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
டெல்லி ஆம்ஆத்மி அரசின் புதிய மதுபானக் கொள்கை 17 நவம்பர் 2021 அன்று செயல்படுத்தப்பட்டது. இந்தக் கொள்கையின் கீழ் டெல்லி 32 கலால் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 849 தனியார் மது விற்பனை நிலையங்களுக்கு சில்லறை மதுபான விற்பனை உரிமை வழங்கப்பட்டது. இக்கொள்கையால் மதுபான வணிகத்திலிருந்து டெல்லி அரசு விலகியது. இந்த கொள்ளையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சர்ச்சையை எழுந்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை, சிபிஐ வழக்குகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த மதுபான கலால் கொள்கை வழக்கில் டெல்லி மாநில ஆம்ஆத்மி அரசின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) கடந்த பிப். 26ஆம் தேதி கைது செய்து, திகார் சிறையில் அடைத்தது. அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 9 அன்று பணமோசடி வழக்கில் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்தது. பிப்ரவரி 28, 2023 அன்றுடெல்லி அமைச்சரவையிலிருந்து சிசோடியா ராஜிநாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து, கலால் ஊழல் வழக்கில் கடந்த மாா்ச் 15-ஆம் தேதி தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளான கவிதாவை அமலாக்கத் துறை கைது செய்தது. அதைத்தொடர்ந்து அவரை திகார் சிறையில் சிபிஐயும் கைது செய்தது.
இதைத்தொடர்ந்து, இநத் வழக்கில் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அமலாத்துறையால் 21 மார்ச் 2024 அன்று இரவு 09:00 மணி அளவில் கைது செய்யப்பட்டார் . இதைத்தொடர்ந்து சிபிஐயால், ஜூன் 26 அன்று அவர் தற்போது அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையில் இருந்து கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், அமலாக்கத்துறை வழக்கில், கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும் இந்த வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) கைது செய்ததால் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவர் சிபிஐ வழக்கில் நீதிமன்றக் காவலில் இருந்துவருகிறார். தொடர்ந்து அவரின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டித்து உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.