டெல்லி:
மும்முனை போட்டி நிலவும் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நாளை மறுதினம் (8ந்தேதி) நடைபெற உள்ளது. அங்கு இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு பெறுகிறது.
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் தற்போதைய பதவிக்காலம் வரும் 22ந்தேதி முடிவடைகிறது. அதற்கு முன்னதாக தேர்தல் நடைபெற்று புதிய சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும். இந்த வரும் அங்கு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 8ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஆம் ஆத்மி போராடி வருகிறது. மேலும், ஆட்சியை பிடிக்க பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் பிரசாரம் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் தரப்பில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட மூத்த தலைவர்கள், ஆம் ஆத்மி கட்சி சார்பில் வேட்பாளரும், ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான கெஜ்ரிவால் உள்பட மூத்த உறுப்பினர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்கள் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது.
வாக்குப்பதிவு பிப்ரவரி 8ந்தேதி நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது.