டெல்லி: காழ்ப்புணர்ச்சி நடவடிக்கையில்மாணவர்கள் ஈடுபவதாக டெல்லி ஜவகர்ஹால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.
பிரபலமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதி கட்டணம் உயர்வைக் கண்டித்து மாணவர்கள் 2 வாரங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தினர்.


போராட்டத்தின் போது, மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. ஒரு கட்டத்தில் மாணவர்களின் தொடர் போராட்டத்தால் கட்டண உயர்வு திரும்ப பெறப்பட்டது.
இந் நிலையில், மாணவர்கள் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொண்டதாக கூறி போலீசில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள், போட்டோக்களை தமது புகார் மனுவுடன் அவர் இணைத்துள்ளார்.


புகார் மனுவை பெற்றுக்கொண்டுள்ளதாகவும், அது பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் கூறி உள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக மாணவர்கள் போராடினர்.
அப்போது, துணைவேந்தரை பற்றி நிர்வாக அலுவலக வளாகத்தில் ஆட்சேபகரமாக பேசியது, பெரும்பாலும் வலதுசாரி தொடர்பான கருத்துகளை முன் வைத்து செயலாற்றியதா துணைவேந்தரின் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக வளாகத்தில் உள்ள சுவாமி விவேகானந்தரின் சிலை அருகில் இத்தகைய நடவடிக்கைளில் மாணவர்கள் ஈடுபட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.