டெல்லி: அகில காங்கிரஸ் கட்சியின் சார்பில், 5 மாநிலங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி, சத்திஷ்கர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், டெல்லி, பீகார் மாநிலங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஒப்புதலுடன் கீழ்க்காணும் நபர்கள் மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
1) சத்திஸ்கர் மாநிலம் – ஸ்ரீ சப்தகிரி சங்கர் உல்கா எம்.பி.
2) உத்தரகாண்ட் மாநிலம் – தீபக் பாண் சிங் எம்எல்ஏ
3)இமாச்சல பிரதேசம் – சஞ்சய்தத் . இவர் தமிழ்நாடு, புதுச்சேரி பொறுப்பாளராக இருந்து வந்த நிலையில், அங்கிருந்து விடுவிக்கப்பட்டு, இமாச்சல பிரதேச பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
4) டெல்லி – இம்ரான் மசூத்
5) பீகார் – பிரிஜ்லால் காப்ரி