டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் நாட்டின உயர்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐஎம்-ல் படிக்கும் மாணவர்கள் போதைப்பொருள் விற்பனை செய்யும் அவலம் நடைபெற்றுள்ளது, இது தேசம் ஒரு மூலையில் அழுகத் துவங்கியிருக்கின்றது என்பதை காட்டுகிறது, மத்தியஅரசு விழித்துக்கொள்ள வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளர்.
நாடு முழுவதும் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான போதைப்பொருட்கள், குஜராத்தில் உள்ள அதானி துறைமுகம் வழியாக கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் போதைப்பொருட்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.முந்த்ரா துறைமுக அதிகாரிகள் மூலம் இது நடைபெறுகிறதா என்பதை ஆய்வுசெய்யும்படி அம்மாநில நீதிபதி கூறி உள்ளார். வெளிநாடுகளில் எப்படி இதையெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து இந்தியாவிலும் அந்த முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று குஜராத் மாவட்ட நீதிபதியான பவார் அதிரடியாக கருத்து தெரிவித்திருந்தார். அது போல, குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி பேசுகையில், ‘குஜராத் போதைப்பொருளின் மையமாக மாறியுள்ளது. அனைத்து போதை பொருட்களும் முந்த்ரா துறைமுகம் வழியாக செல்கிறது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலிரன், போதைப்பொருள் தனிமனிதரின் பிரச்சினை அல்ல; சமூகப்பிரச்சினை, அதை வேரறுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். சமீபத்தில்கூட போதைப்பொருள் வருகை குஜராத்தில் இருந்துதான் வருகிறது என்று அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார்.
இந்தநிலையில், தலைநகர் டெல்லியில் ரூ.1200 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்குள்ள தலைசிறந்த கல்வி நிறுவனமான ஐஐஎம் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருவதுடன், போதைப்பொருட்கள் விற்பனையிலும் ஈடுபடுவதுதெரியவந்துள்ளது.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள மூத்த காங்கிரஸ் தலைவரும் சிறுபான்மை ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ், தேசத்தின் தலை நகரில் ஐஐஎம் (Indian institute of management) , பி.டெக் படித்தவர்கள் போதை மருந்து விற்பனையாளர்கள் என்றால் தேசம் ஒரு மூலையில் அழுகத் துவங்கியிருக்கின்றது என்று பொருள்! ஒன்றிய அரசு விழிக்க வேண்டும்!
தனியார் துறைமுகங்களில் கண்காணிப்பினை அதிகப்படுத்துக! என மத்திய அரசை எச்சரித்துள்ளார்.