டெல்லி: கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக தொடர அனுமதிக்ககூடாது என தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. கெஜ்ரிவால் முதலமைச்சராக நீடிக்க எந்த சட்டத் தடையும் இல்லை என்று கூறியுள்ளது.
டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தன்னை கைது செய்யமாட்டோம் என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதி அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது
. மனு தள்ளுபடியான உடனே, கைது வாரட்ண்டுடன் கெஜ்ரிவால் வீட்டை அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சுமார் 4 மணி நேர ரெய்டுக்கு பின்னர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்த நிலையில், சிறையில் உள்ள கெஜ்ரிவால் முதலமைச்சராக தொடரக்கூடாது, அதற்கு தடை விதிக்க வேண்டும் என பொதுநல மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கெஜ்ரிவால் முதலமைச்சராக நீடிக்க எந்த சட்டத் தடையும் இல்லை என்று கூறி. அந்த மனுவை தள்ளுபடி செய்தது.