டில்லி

டில்லி உயர்நீதிமன்றம் நாளை புதிய நாடாளுமன்றம், கட்ட இடைக்கால தடை விதிக்கும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

டில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடக் கட்டுமானப் பணிகள் தொடங்க கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.  செண்டிரல் விஸ்தா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டுமானத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடம், உள்ளிட்ட பல இடம் பெற்றுள்ளன.  இதற்கான செலவாக ரூ.20,000 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.   .

தற்போது கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் நாட்டின் பொருளாதாரம் கடும் பாதிப்பு அடைந்துள்ளது.  இவ்வாறு இருக்க  இவ்வளவு பணம் செலவு செய்து புதிய கட்டிடம் ஒன்றை அமைக்கப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதையொட்டி மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா உச்சநீதிமன்றத்தில் இந்த கட்டுமான பணிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இதை டில்லி உயர்நீதிமன்றம் விசாரிக்கும் என உத்தரவிட்டது.  அதற்கிணக்கள் இந்த வழக்கு மனு தற்போது டில்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.   இந்த கோரிக்கையை ஒரு புதிய மனுவாக அளிக்குமாறு கேட்டுக் கொண்ட டில்லி உயர்நீதிமன்றம் நா:ளை இந்த வழக்கை விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.