டெல்லி

நேற்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த மார்ச் 21 அம் தேதி அன்று மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது. கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த ஜாமீனுக்கு டெல்லி உயா்நீதிமன்றம் தடை விதித்ததைத்தொடர்ந்து, திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 26-ஆம் தேதி சிபிஐ கைது செய்தது.

உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அமலாக்கத் துறை வழக்கில், கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கினாலும் சிபிஐ வழக்கில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்., தன்னை சிபிஐ கைது செய்ததற்கு எதிராகவும், இடைக்கால ஜாமீன் கோரியும் டெல்லி உயா்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார்.

நேற்று நடந்த விசாரணையில்\, கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கெஜ்ரிவால் கைதுக்கு நியாயமான காரணம் இல்லை என கூற முடியாது என்றும் ஜாமீனுக்கு அவர் விசாரணை நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கூறியுள்ளது.

விரைவில் சிபிஐ கைதுக்கு எதிராக, டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.