டெல்லி

டெல்லி உயர்நீதிமன்றம் கொரோனாவை பாபா ராம்தேவின் கரோனில் மருந்து குணமாக்கும் என்பதற்கு கண்டனம் தெரிவித்து அந்த வாசகத்தை நீக்க உத்தரவு இட்டுள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவியின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு,  எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில்,  இந்த  நிறுவனம் அலோபதி மருத்துவத்தின் தரத்தை சீர்குலைக்கும் வகையில் விளம்பரம் செய்வதாக குற்றம்சாட்டி இந்திய மருத்துவ சங்கம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரத்தில், கொரோனாவை கரோனில் மருந்து குணமாக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

கொரனாவை, கரோனில் மருந்து குணமாக்கும் என்ற வாசகத்துக்கு கண்டனம் தெரிவித்து அதை நீக்குமாறு பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  மேலும் அடுத்த 3 நாட்களுக்குள் இது தொடர்பான அனைத்துப் பதிவுகள் மற்றும் விளம்பரங்களை அகற்ற வேண்டும என்றும் உத்தரவிடப்பட்டது.