டில்லி
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள நிதியில் டில்லி அரசு பாதிக்கு மேல் உபயோகிக்கவில்லை.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்துக்கும் சுகாதார வசதிகள், ஒவ்வொரு ஊரிலும் கழிவறை அமைத்தல் போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றது. அதன் படி மத்திய அரசு டில்லி யூனியன் அரசுக்கு ரூ.149.86 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
தற்போது டில்லி யூனியன் அரசு 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தொடர்பான பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி டில்லி அரசு இந்த தொலையில் ரூ. 74.87 கோடி மட்டுமே உபயோகித்துள்ளது. மீதமுள்ள ரூ.74.99 கோடி உபயோகப்படாமல் உள்ளது.
உபயோகப்படுத்தப் பட்ட நிதியில் திடக்கழிவு மேலாண்மைக்காக ரூ. 52.68 கோடிகளும், பொது கழிப்பறை கட்ட ரூ. 9.99 கோடிகளும் பயன்படுத்தப் பட்டுள்ளது. தனிப்பட்ட வீட்டுக் கழிப்பறை மானியத்துக்கு ரூ. 4.24 கோடியும், தகவல், பயிற்சி மற்றும் தொடர்புச் செலவுகளுக்காக ரூ. 14.89 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது.