புதுடெல்லி: இந்திய தலைநகரில், கொரோனா இரண்டாவது அலையை ஒட்டி, இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய அரசுடன் இணைந்து அனைத்து மாநில அரசுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 96,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில், 47 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தலைநகர் டெல்லியிலும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் ஏப்ரல் 30ம் தேதி வரை, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உடனே அமலுக்கு வருவதாகவும் டில்லி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இரவுநேர ஊரடங்கு உத்தரவின் மூலம், அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

[youtube-feed feed=1]