டெல்லியில் மாசு அளவைக் கட்டுப்படுத்த ட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு கெஜ்ரிவால் அரசு முழுத் தடை விதித்துள்ளது.

குளிர்காலத்தில் டெல்லியில் அதிகரித்து வரும் மாசு அளவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், பட்டாசு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு முழுத் தடை விதிப்பதாக கெஜ்ரிவால் அரசு அறிவித்துள்ளது.

ஆன்லைனில் பட்டாசு விற்பனை மற்றும் விநியோகத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 1, 2025 வரை அமலில் இருக்கும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடையை கடுமையாக அமல்படுத்த, தில்லி காவல்துறை, தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு மற்றும் வருவாய்த் துறையுடன் இணைந்து செயல் திட்டம் தயாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இது மாசுபாட்டைக் கட்டுப்படுத்த 21 மையப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட டெல்லி அரசின் குளிர்கால செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று அவர் கூறினார்.