டெல்லி: பிரிட்டனிலிருந்து டெல்லி திரும்பும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
வரும் 14ம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவை வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை டெல்லி தலைமைச் செயல் அதிகாரி விஜயகுமார் தேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
டெல்லி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட பயணிகள் தனிமைப்படுத்தும் மையத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
பிரிட்டனில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.