டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இருந்தாலும் அவர் ஜெயிலில் இருந்து வெளிவர முடியாத நிலை தொடர்கிறது.
ஆம் ஆத்மி கட்சி மீது டெல்லியில் மதுபான கொள்கைகளை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இது தொடர்பாக சி பி ஐ விசாரணைக்கு அந்த மாநில ஆளுந்ர் உத்தரவிட்டார். இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக எழுந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, இதுதொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை செய்து டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ்சிசோடியா மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இந்த வழக்கு தொடர்பாக முதல்வ அரவிந்த் கெஜ்ரிவாலையும் கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். பின்னர் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. அந்த ஜாமின் முடிந்ததும், அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவர் மீண்டும் ஜாமின் கோரி டெல்லி உயர்நீதி மன்றத்தை நாடினார். இந்த நிலையில், ஜூன் 26 ந்தேதி அன்று திகார் சிறைக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியதுடன், அவரை கைது செய்தும் நடவடிக்கை எடுத்தனர். இதனால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.
கெஜ்ரிவால் ஏற்கனவே 90 நாட்கள் சிறையில் தண்டனை அனுபவித்த நிலையிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற காரணங்களை கருத்தில் கொண்டும் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்துள்ள நிலையில், அவர் சிபிஐ தரப்பிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் அதிலும் ஜாமின் கிடைக்காமல் கெஜ்ரிவால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்துள்ளது குறித்து கூறிய ஆம்ஆத்மி அமைச்சர் அதிஷி, “…அவருக்கு (அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு) ரூஸ் அவென்யூ நீதி மன்றம் ஜாமீன் வழங்கியது பாஜகவுக்குத் தெரியும். சுப்ரீம் கோர்ட்டிலும் ஜாமீன் கிடைக்கும் அதனால் தான், மற்றொரு சதித்திட்டம் தீட்டி, ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வர இருந்த நாளில், அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது. ஏனென்றால், ED வழக்கில் ஜாமீன் பெற்றால், அவர் சிறையில் இருந்து வெளியே வந்து 10 மடங்கு வேகமாக டெல்லி மக்களுக்காக பணியாற்றுவார். உங்கள் சதியை நாடு அம்பலப்படுத்தியுள்ளது… ஒவ்வொரு நீதிமன்றமும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி வருகிறது, உங்கள் ஆணவத்தை முடிவுக்கு கொண்டு வரவும், மற்ற கட்சிகளுக்கு எதிராக சதி செய்வதை நிறுத்தவும் நான் விரும்புகிறேன் என்றார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்பி கமல்ஜீத் செஹ்ராவத், கலால் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் மட்டுமே வழங்கி உள்ளது. இடைக்கால ஜாமீன் என்பது ஒருவர் செய்த குற்றத்தில் இருந்து விடுபடாது. இடைக்கால ஜாமீன் சிறையில் இருந்து வெளியில் இருக்க வாய்ப்பளிக்கிறது. இதனால், அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலில் ஈடுபடவில்லை என்று அர்த்தம் இல்லை நீதிமன்றம் அவரை விடுவிக்கவில்லை” என்று தெரிவித்தார்.
அதுபோல டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில், “இது புலனாய்வு அமைப்புக்கும் நீதித்துறைக்கும் இடையேயான முடிவு. இடைக்கால ஜாமீன் நீங்கள் விடுவிக்கப்படுவது முக்கியமல்ல. ஆனால், நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு வந்துள்ளது. ஆனால், கலால் வரி விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் செய்திருப்பது டெல்லி மக்களுக்கு நன்றாகத் தெரியும், அதேபோன்றுதான் டெல்லி மக்களைக் கொள்ளையடிக்க முயற்சிக்கும் இந்த மின்சார ஊழல் விவகாரமும். ..” என கூறினார்.