டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 20 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, ஒடிசா, ஜார்க்கண்ட், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அந்தந்த மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
முன்களப் பணியாளர்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந் நிலையில் நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 20 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் 6 மருத்துவ மாணவர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இந்த 6 மாணவர்களில் 3 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஆவர். மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.