டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை கூறி உள்ளது.
3 வாரங்களாக தலைநகர் டெல்லியில் தொற்று பரவும் விகிதம் அதிகரித்து வந்தது. இந் நிலையில், இந்த விகிதம் தற்போது குறையத் தொடங்கி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியதாவது:
நவம்பர் 7ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 15.26 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இப்போது 8.5 சதவிகிதமாக குறைந்து இருக்கிறது. கொரோனா தடுப்பு மருந்து விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் என்று நம்புகிறேன்.
அதுவரை கொரோனா தொற்றை கட்டுக்குள் வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போதைய நிலையில் பள்ளிகள் திறப்பு இல்லை என்றார்.